தமிழ்வெளி கட்டற்ற கருத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும் திரட்டி சேவையை பயன்படுத்த சில விதிமுறைகள் தமிழ்வெளி நிர்வாகத்தினால் வகுக்கப்பட்டுள்ளன, சுருக்கமாக அவைகளில் சில.
1. தமிழ்வெளி வலைப்பதிவு திரட்டியில் வலைப்பதிவுகளை இணைக்க தமிழ்வெளி இணைய தளத்தின் திரட்டியில் இணைக்கஎன்ற சுட்டி வழியாக விண்ணப்பத்தை நிரப்பு அனுப்புதல் வேண்டும்....வலைப்பதிவு பெரும்பாலும் தமிழ்மொழியில் இருத்தல் வேண்டும்
2. இணைக்க விரும்பும் பதிவுகளை நிர்வாகிகள் பரிசீலித்து பின் திரட்டியில் இணைப்பார்கள், இது கற்கால நடைமுறையாக இருந்த போதிலும் தற்போதைக்கு தமிழ்வெளி நிர்வாகம் இந்த முறையை சில நடைமுறை பிரச்சினைகளை தவிர்க்க தேர்ந்தெடுத்துள்ளது.
3.தமிழ்வெளி கட்டற்ற கருத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும், எவ்வித சார்புநிலையும் இன்றி பொதுவில் படிக்க கூடிய அனைத்து பதிவுகளையும் இணைப்பதில் எந்தவித தயக்கமும் இல்லையென்றாலும், இணைக்க விரும்பும் பதிவுகளை திரட்டியில் இணைத்துக்கொள்வதும் நீக்குவதும் நிர்வாக குழுவின் தனிப்பட்ட முடிவாகும்.
4. பதிவுகள் இணைக்கப்பட்ட பின் தமிழ்வெளி திரட்டியில் இருந்து நீங்கிக்கொள்ள விரும்பினால் தமிழ்வெளி திரட்டியில் பதிவு செய்ய பயன்படுத்திய மின் அஞ்சல் முகவரியிலிருந்து admin@tamilveli.com என்ற மின்மடல் முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். உடனுக்குடன் செயல்பட முயற்சித்தாலும் ஏதேனும் கால தாமதமேற்படின் மன்னித்து பொறுத்துக்கொள்ளவும்.
5. இணைக்கப்படும் பதிவர் விவரங்கள் "பதிவுகளின் பட்டியல்" என்ற சுட்டியில் காண்பிக்கப்படும், இவ்விபரங்கள் தவிர்த்து வேறு விபரங்கள் எதுவும் யாரிடமும் கொடுக்கப்படாது.... பொதுவாக, தமிழ்வெளிக்கு கொடுக்கின்ற தகவல்கள் தமிழ்வெளி மற்றும் அதன் சார்பாக சேவை வழங்குபவர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும். கீழ்கண்ட விதிவிலக்குகள் தவிர்த்து...
விதிவிலக்குகள்
5.1 : காவல்துறை, நீதித்துறை வழியாக அனுகப்படும்போது சட்டத்திற்குட்பட்ட முறைகளில் விபரங்கள் அளிக்கப்படும்.
5.2 : தமிழ்வெளி சேவை தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சேவை காரணங்களுக்காக தேவைப்படின் தமிழ்வெளி நிர்வாகம் யாருக்கேனும் அளிக்கலாம்.
5.3 : தங்களுடைய ஸ்பான்சர்களுக்கு விபரங்களை அளிக்கலாம் .
 5.4 : தமிழ்வெளி தளத்திற்கு முறையற்ற தொல்லை தரும் விதமாக எவ்வித காரியத்தில் ஈடுபட்டாலும், முறையற்ற ஆபாச தாக்குதல்கள், தொல்லைகள் தொடர்ந்தாலும் அதை தடுத்து நிறுத்துவதற்காக நாங்கள் பெற்றுள்ள தகவல்களை தமிழ்வெளி பயன்படுத்திக்கொள்ளும். உங்களது நிறுவனம், பள்ளி, கல்லூரி, மின் அஞ்சல் சேவை மற்றும் பிற சேவை வழங்குபவரிடம்(இந்த பட்டியலில் இல்லாதபோதிலும் தேவைப்படுவோரிடம்) தொடர்புகொண்டு உங்களது நடத்தை பற்றியோ தெரிவிக்கப்படுவதும் இதில் அடங்கும்.
6. தமிழ்வெளி குப்பை மின்மடல்களை உங்களின் மின்மடல் முகவரிக்கு அனுப்பாதென்ற போதும் தமிழ்வெளி அறிவிப்புகள் சேவை தொடர்பான மின்மடல்களை அனுப்பலாம்.
7. தமிழ்வெளி தளத்தின் பிற சேவைகளுக்கு தமிழ்வெளி திரட்டியில் சேருவதனால் உங்களது பதிவுகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கின்றீர்கள், விளம்பரங்கள் தவிர்த்து வியாபார நோக்கங்களுக்கோ அச்சு பிரதிகளாகவோ எனில் உங்களின் அனுமதியை பெற்றே மீண்டும் பயன்படுத்திக்கொள்ளப்படும்
8. எவ்வித முன்னறிவிப்புமின்றி விதிமுறைகள் மாற்றப்படலாம்
பொறுப்பு துறப்பு
1.பதிவுகள், அவற்றின் உள்ளடக்கம், சுட்டிகள் ஆகியவைகளுக்கு தமிழ்வெளி பொறுப்பானவை அல்ல, தமிழ்வெளி திரட்டி முதல் சில வரிகளை மட்டும் காண்பிக்கும், வேறு சில சேவைகளில் முழு பதிவையும் காண்பிக்கலாமென்ற போதும் தமிழ்வெளி பதிவர்களின் தளத்திற்கே வாசகர்கள் சென்று படிப்பதையை ஊக்கப்படுத்துகிறச்து.